Raghunathan posted an update 8 years, 1 month ago
அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் மூர்த்தி ஆம்புலன்ஸ் வசதி உரிய நேரத்தில் செய்து தரப்படாததால் உயிரிழந்தாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில், நவீன இந்திய மொழிகள் துறையின் தமிழ் பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் வயிற்றுவலி காரணமாக பாதிக்கப்பட்ட மூர்த்தி ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுமார் 6 மணி நேரமாக டெல்லி அழைத்துச் செல்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. ஆம்புலன்ஸ் வசதியில்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூர்த்தி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மூர்த்தியின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழகம் கொண்டுவரப்படும் மூர்த்தியின் உடல் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.