• Profile picture of Raghunathan

    Raghunathan posted an update 8 years, 1 month ago

    பண்டிகை முன்பணம் எங்கே?
    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்குக: சிபிஎம்
    போக்குவரத்து தொழிலாளர்களையும், அரசு ஊழியர்களையும் வஞ்சித்துள்ள தமிழக அரசு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணப் பலன்களையும் வழங்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் வியாழனன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். மதுரையில் அவர்களை காவல்துறையினர் பலவந்தமாக கைது செய்த காட்சி.

    சென்னை, அக்.27-

    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைமுன்பணத்தையும், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 50 ஆண்டுகளாக பண்டிகை முன்பணம் வழங்கப்பட்டுவந்தது. அதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 45 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ஒருகிலோ அளவில் இனிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இன்னும் பண்டிகை முன்பணமும் வழங்கப்படவில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்படும் இனிப்பும் வழங்கப்படவில்லை. பண்டிகை முன்பணத்தை உடனடியாக வழங்கவேண்டுமென வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களிலுள்ள சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் அக்டோபர் 27 வியாழனன்று மாநிலம் முழுவதும் போக்குவரத்துக்கழகப் பணிமனைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தினமும் சுமார் 2 கோடிப் பேர் அரசுப்போக்குவரத்துக் கழகங்களையே பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முக்கிய சேவையாற்றும் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பண்டிகை முன்பணத்தையும், இனிப்பையும் வழங்க மறுப்பதுஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே,தமிழக அரசு உடனடியா தலையிட்டு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பண் டிகை முன்பணமும், இனிப்பும் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    அரசு ஊழியர்கள்

    அதேபோல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2016 முதல் வழங்கக்கூடியஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பு வழங்கக் கோரியும், சம் பள கமிசன் பேச்சுவார்த்தை இன்னும் துவங்காத நிலையில் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரியும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்அக்டோபர் 26 புதனன்று 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.எனவே, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை மற்றும் அவர்களது உணர்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு, 1.7.2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியையும், 20 விழுக்காடு இடைக்கால நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.