• Profile picture of Raghunathan

    Raghunathan posted an update 8 years, 1 month ago

    18 குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம்
    பட்டாசு விபத்து வழக்கில் இடைக்கால நிவாரணம்

    மதுரை, அக். 26 –

    சிவகாசி மற்றும் திருவிடைமருதூர் பட்டாசு விபத்துக்களில் பலியான 18 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 3 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த நிவாரணத் தொகையை நவம்பர் 25-ஆம் தேதிக்குள் வழங்கியாக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசுக் கடை தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாகவே வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. செவ்வாயன்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வெடிபொருள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்தனர். சிவகாசியில் நடந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், விதிமீறல்களுமே காரணம் என்று குற்றம் சாட்டினர்.விருதுநகர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் பட்டாசுக் கடைகளுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.தீபாவளியை முன்னிட்டு வெடிபொருள் கட்டுப்பாட்டுச் சட்டம், விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்; விதிமீறல் புகார் வரும்பட்சத்தில், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும், சிவகாசி பட்டாசு விபத்து வழக்கை சிபிஐ வசம் ஏன் ஒப்படைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.திருவிடைமருதூர் அருகே ஒழுகச்சேரியில் கடந்த 2013-ஆண்டு நடந்தபட்டாசு வெடி விபத்தில் 10 பேர் பலியான நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படாததற்கான